தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பலபாகங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சபைஒத்திவைப்புப் பிரேரணை தாக்கலின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதேதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களின் நிலைப்பாடு குறித்துஅரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்தினார்.
மேலும்,நாட்டில் வன்முறைகளை இல்லாதொழிப்பதன் மூலமே நாட்டின் நிரந்தர அமைதியைநிறுவ முடியும் என சம்பந்தன் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் நீதி மற்றும் சமத்துவத்தை அனுபவித்துவரும் ஒரு சூழலை உருவாக்குவதற்கு எல்லா கட்சிகளும் பங்களிப்பை வழங்க வேண்டும்என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதேவேளை,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கான சதி குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.