Loading...
நம் அனைவருடைய வீட்டிலும் விளக்கேற்றி, தெய்வத்தை வழிபடுவது ஒரு கலாச்சார பண்பாடாகும்.
Loading...
அப்படி இருக்கும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தில் நாம் செய்யும் ஒருசில செயல்களை திருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
வீட்டில் விளக்கேற்ற சிறந்த நேரம் எது?
- காலை 3 மணி முதல் 5 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்த நேரமாகும். இதனால் நமக்கு சர்வமங்கள யோகம் கிடைக்கும்.
- வீட்டில் மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவதால், நல்ல வேலை, கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
- காலையில் நமது வீட்டில் விளக்கு ஏற்றும் போது, நம்முடைய உடல் மற்றும் மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின விளக்கேற்ற வேண்டும்.
- வீட்டில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றி, தெய்வத்தை வழிபடும் போது, நமது வீட்டின் கொல்லைப் புறக் கதவைச் மூடிவிட வேண்டும்.
- வீட்டில் விளக்கேற்றும் போது, அந்த விளக்கிற்கு பால், கற்கண்டு வைத்து வழிபட்டால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் செய்யக் கூடாத செயல்கள் என்ன?
- வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை சீவக் கூடாது. வீட்டின் குப்பையை பெருக்கக் கூடாது.
- சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.
- விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் சாப்பிடக் கூடாது.
- விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக் கூடாது.
Loading...