அவுஸ்திரேலியாவுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பு செயலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அண்மையில் மனுவர தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி தொடர்பில் பொது மக்களிடமிருந்து பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட ஏனையவர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.