Loading...
பொதுமக்கள் மற்றும் அதிமுக அடிமட்ட தொண்டர்களை தனது பக்கம் ஈர்க்கும் வண்ணம் பன்னீர் செல்வம் நீதிகேட்கும் பயணம் ஒன்றை தொடங்கவுள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் திகதியன்று, தொடங்கும் இப்பயணத்திற்காக மகேந்திராவின் கார்களில் பிரத்யேகமான XYLO காரை தான் பன்னீர் செல்வம் பயன்படுத்த உள்ளார்.
நீதி கேட்கும் பயணத்திற்கென்றே இந்த கார் பிரத்யேகமான வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. காரின் முன்புறம் ஜெயலலிதாவின் படம் வட்டவடிவில் காரில் பொறிக்கப்பட்டுள்ளது.
Loading...
காரின் முன்புறம் அதிமுக கொடி வைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் சிறிய அளவிலான தலா 4 கொடி கம்பங்கள் காரில் உள்ளது.
தற்போது, இந்த வாகனத்தில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செல்லவிருக்கிறார்.
Loading...