பொன்னியின் செல்வன்-2 படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு கடந்த 28ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின்னர் மணிரத்னம் படமாக எடுத்தார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.