டிம் டேவிட் 3 பந்தில் 3 சிக்சர்கள் அடித்து மும்பையை வெற்றி பெற வைத்தார்.
ஜெய்ஷ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார். அவர் 62 பந்துகளில் 16 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்தார். இந்த ஐ.பி.எல். களில் அடிக்கப் பட்ட 3-வது சதமாகும். அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
ஜெய்ஷ்வாலின் இந்த ஆட்டம் பலன் அளிக்காமல் போனது. மும்பை அணி 213 ரன் இலக்கை எடுத்து வெற்றிபெற்றது. டிம் டேவிட் 3 பந்தில் 3 சிக்சர்கள் அடித்து மும்பையை வெற்றி பெற வைத்தார்.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஜெய்ஷ்வாலை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் நாங்கள் இலக்கை அடைந்த விதம் சிறப்பாக உள்ளது. டிம் டேவிட் திறமையான வீரர். அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய்ஷ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவரது ஆட்டம் இந்திய கிரிக்கெட்டுக்கும், ராஜஸ்தான் அணிக்கும் நல்லது. அவர் மிகவும் திறமையாக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறி உள்ளார்.