Loading...
பூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
Loading...
எனவே நாம் பூசணிக்காய் விதையை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ
பூசணிக்காய் விதையின் மருத்துவ நன்மைகள்
- பூசணி விதைகளை காயவைத்து, பொடி செய்து, அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால், நமது உடலின் வலிமை அதிகரிக்கும்.
- பூசணி விதையில் உள்ள மக்னீசிய சத்துக்கள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
- பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துக்கள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆண்மையின்மை பிரச்சனையை குணப்படுத்துகிறது.
- பெண்கள் பூசணி விதையை நெய்யில் வறுத்து அதை தினமும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் குணமாகும்.
- பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன், விந்தின் திறன் அதிகரிக்கும். மேலும் பூசணி விதையில் கஷாயம் செய்து குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
- பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் இரசாயன் தாக்கத்தை தடுத்து, ஹார்மோன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
Loading...