உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள்.
சிதறும் ரஷ்யா
17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு.
ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், புடின் கொல்லப்படுனார் என்றும், அதற்குப் பின் ரஷ்யா உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணரான Paul Goble தெரிவித்துள்ளார்.
புடின் சிறுபான்மை இனத்தவர்களை தனது போருக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும், அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்தது, புடினுக்கே பாதகமாக திரும்பும் என்றும் சிலர் கணிக்கத் துவங்கியுள்ளார்கள்.
அத்துடன், எப்படி 1991ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், 15 புதிய நாடுகளாக உடைந்ததோ, அதேபோல ரஷ்யாவும் உடைந்து சிதறும் என்கிறார் Paul Goble.
இதற்கிடையில், ரஷ்யா உடைந்து சிதறினால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டும் வரைபடங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.