உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இலக்கு வருமானத்தை விட 105 வீதமான வருமானத்தை ஈட்டியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதில் பெரும்பாலானவை இலங்கை சுங்கத்தால் சம்பாதித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊராபொல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.
302 பில்லியன் டொலர்
“இந்த ஆண்டு முழுவதும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இலக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 1665 பில்லியன் டொலர்கள் இலக்காக உள்ளது.
அதன்படி காலாண்டில் 302 பில்லியன் டொலர்கள் இலக்கை அடைய வேண்டும். ஆனால் 316 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்றுள்ளோம்.
இதில் முக்கிய பங்கு சுங்க திணைக்களத்தினுடையது , சுங்கத்தால் முதல் காலாண்டில் 89% வருவாயைக் ஈட்ட முடிந்தது.
மிக முக்கியமான விடயம் கலால் துறையின் முதல் காலாண்டில் 64% வருவாய் பெறப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.