Loading...
யாழ் – கொழும்பு புகையிர மார்க்க சீரமைப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முழுமை அடைந்து விடும்.
அதன் பின்னர் காங்கேசந்துறை – கொழும்பு இடையே புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயண நேரம்
அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Loading...
அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
மேற்கொள்ளப்பட்ட திருத்தம் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்தில் சராசரியாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்களை இயக்க முடியும்.
இதனால் பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையுமென்றார்.
Loading...