சிலருக்கு முகம் நன்றாக சிவந்த நிறத்தில் இருக்கும். ஆனால், கை,கால் முட்டி மட்டும் கருப்பாக அசிங்கமாக இருக்கும். இது சில ஆடைகள் அணியும் பொழுது மிகவும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தலாம்.
அதிகப்படியாக சூரிய ஒளி படுவது, ஹோர்மோன் மாற்றங்கள் என்பவற்றால் உடலில் சில பாகங்கள் மட்டும் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களின் விளைவினாலும் இவ்வாறு கருமையடையலாம்.
அவற்றை நீக்குவதற்கான ஒரு குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
ஒலிவ் ஒயில் – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
எள்ளு பவுடர் – சிறிதளவு
எவ்வாறு செய்வது?
தேங்காய் எண்ணெய், எள்ளு பவுடர், ஒலிவ் ஆயில் இவை மூன்றையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கை,கால் முட்டிகளில் தடவி தேய்க்க வேண்டும்.
இவ்வாறு செய்ததன் பின்னர் 15 நிமிடங்கள் கழித்து அதனை நீக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் குளிக்கும் சந்தர்ப்பங்கள் கை மற்றும் கால்களின் முட்டிகளை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
முகத்துடன் சேர்த்து கை மற்றும் கால் முட்டிகளையும் ஸ்க்ரப் செய்வதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி சருமம் சுத்தமாகும்.