எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் உரிய தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் காத்திரமான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர் மஹிந்த எதிரிசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி படைவீரர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் யுத்தம் நடாத்திய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களே இன்று தமது உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் உரிய தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவில்லையாயின் காத்திரமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள தீர்மானத்தின் பின்னர், எம்மில் எத்தனை பேர் பலியாவார்கள், பொலிஸில் எத்தனை பேர் பலியாவார்கள் என்பதைக் கூற முடியாது.
நாங்கள் இராணுவத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டிய சகல வழிகளிலும் கூறியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.