அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் 20ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். தான் பதவியேற்றதன் பின்னர் ட்ரம்ப் பல அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், ட்ரம்ப் உள்நாட்டு பாதுகாப்புதுறை மூலம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, “சட்டவிரோத குடியேரிகளை வெளியேற்றுவதில், உள்நாட்டு பாதுகாப்பு துறை வகுப்புகள் அல்லது பிரிவுகள் என இனியும் விதிவிலக்கு வழங்காது”.
அத்துடன், “குடியுரிமை விதிகளை மீறியவர் என ஒருவரை உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரி நம்பினால், அவரை கைது செய்யும் முழு அதிகாரம் உண்டு” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குடியுரிமை விதிகளை மீறியதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை நிச்சயம் எதிர்கொள்வார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டவர்கள் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த திட்டத்தினால் இலங்கை, இந்தியா நாட்டவர்களும் நாடுகடத்தப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.