தமிழ் மக்கள் மீது இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமது சுய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது இவ்வாறு இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அரசியல் ரீதியில் தீர்வு திட்டம் ஒன்று முன்வைக்கு வரையிலும், தமிழ் மக்கள் மீது இவ்வாறு இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக இவ்வாறான ஒரு நிலை நீடித்தமையின் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.