இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியி;ன் தலைவரை அமைச்சர் சந்தித்தார். இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் சலுகைக்கடன்
எனவே குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் சாப்ரி சுட்டிக்காட்டினார்.
இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியிடம் முன்வைத்ததாகவும், அதை அந்த வங்;கி ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார. சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் சர்வதேச ரீதியாக அமைச்சர்கள், வங்கிகளின் ஆளுநர்கள் உட்பட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்தநிலையில் அமைச்சர் சாப்ரி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு பதிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.