உலக நாடுகளின் பட்டியலின்படி அதிகபட்சம் மாத சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் உள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் மோகம் பெரும்பாலானோர் மத்தியில் நிலவி வரும் நிலையில், ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் வேலைக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
சுவிட்சர்லாந்து மக்கள்
ஆனால் உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்து மக்கள் தான் உலகிலேயே அதிகபட்சமாக மாத சம்பளம் பெறுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் சராசரியாக மாதம் 6,096 டொலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 4,93,776 ரூபாய்), அதற்கு அடுத்த இடத்தில் லக்சம்பர்க் மக்கள் சராசரியாக மாதத்திற்கு 5,015 டொலர்கள், சிங்கப்பூர் மக்கள் 4,989 டொலர்கள் சம்பாதிக்கிறார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு கிடைத்த இடம்
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக கருதப்படும் அமெரிக்க மக்களின் சராசரி மாதச் சம்பளம் 4,245 டொலர்களாக உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக கருதப்படும் இந்தியா மக்கள் அதிகபட்ச மாத சம்பளம் வாங்குவோர் பட்டியலில் 65வது இடத்திலும் (சராசரி மாதச் சம்பளம் 573 டொலர்கள், அதாவது 46,413 ரூபாய்), சீனா 44வது இடத்திலும் உள்ளன.
கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் சராசரியாக 145 டொலர்கள் மாத சம்பளம் (104வது இடம்) பெறுகின்றனர்.
https://twitter.com/stats_feed/status/1652650114228559872