நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க புனித கடவுளால் கூட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார வீழ்ச்சி
நாமல் ராஜபக்ச புரொய்லர் கோழி என்றும் அவரது தந்தை மகிந்த ராஜபக்ச அரசியலின் கிராமத்து கோழி என்றும் கூறப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிவரும் காலத்தில் நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார்கள் என்றும், எனினும் அவர்கள் அரசியலில் ஏதாவது ஒரு மட்டத்தில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போதும் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருந்திருந்தால் அதனை சரியாக நிர்வகித்திருப்பார் எனவும் பொருளாதாரம் இவ்வளவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்காது எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.