பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம். ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்.
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.