அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை.
இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே தடுத்து அழகிய தட்டையான வயிற்றை பெறுவதற்கு பின்வரும் நடைமுறைகளை கையாளலாம்.
உரிய நேரங்களில் உணவை உட்கொள்ளல்
இன்று அனேகமானவர்கள் வேலைப் பழு காரணமாக நீண்ட நேரம் உணவினை உள்ளெடுக்காலம் இருக்கின்றனர். இவ்வாறு இருப்பதனால் உடலில் இன்சுலின் அளவு குறைகின்றது.
இன்சுலின் ஆனது வயிற்றுப் பகுதியில் கொழுப்பின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
எனவே உரிய நேரங்களில் உணவினை உள்ளெடுப்பதனால் இப்பிரச்சினையை தவிர்க்க முடியும்.
உணவை அரைத்தல்
உள்ளெடுக்கப்படும் உணவானது குறைந்தது 30 தடவைகள் ஆவது அரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அரைக்கப்படுவதனால் உணவுச் சமிபாடு இலகுவாக்கப்படுவதுடன், விரைவாக இடம்பெறவும் உதவுகின்றது.
மாறாக அரைக்காது உள்ளெடுக்கப்படும்போது வயிற்றில் அதிக நேரம் தங்கி பருமனை அதிகரிக்கின்றது.
உணவு மற்றும் இதயம்
சுத்தமான உணவு வகைகளை உள்ளெப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளல். உதாரணமாக ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றன.
உப்பின் அளவு
உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவினை கண்காணித்தல். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றில் அதிகளவில் உப்பு இருப்பதால் அவற்றினை அளவாக உட்கொள்ள வேண்டும்.
குத்தும் பயிற்சி
அன்றாட பயிற்சியில் குத்துச் சண்டையில் ஈடுபடுவது போன்ற பயிற்சியினை சேர்த்துக்கொள்வதன் மூலம் கொழுப்பு எரிக்கப்படுகின்றது.
நீர்
நாள் ஒன்றிற்கு 7 தொடக்கம் 8 கிளாஸ் வரை நீர் அருந்துதல் வேண்டும். தவிர இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வருதல் வேண்டும்.