இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் வசித்து வரும் மக்கள் இறந்த பிணத்துடன் வாரக்கணக்கில் வாழும் ஐதீகத்தை கடைபிடித்து வருகின்றார்கள்.
இந்தத் தீவில் வாழும் டோராஜன் மக்கள் மத்தியில் இந்த வினோத ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் தங்கள் வீட்டு குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஏனெனில் இவர்கள் மரணமே இல்லை என்று நம்புகின்றார்கள்.
மேலும் இந்த மக்கள் இறந்தவர்களின் உடலை வருடக்கணக்கில் தங்களின் வீட்டிலேயே வைத்து, அவர்களுக்கு உணவூட்டி, உடை மாற்றி விட்டு, அவர்கள் மீது ஒரு உயிருள்ள நபர் மீது காட்டும் அக்கறை போல செலுத்தி வாழ்கின்றார்கள்.
ஒரு சில டோராஜன் இனத்தை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு வருடமும் இறந்த தங்கள் உறவினரின் உடலை தோண்டி சுத்தம் செய்து, அதற்கு புது ஆடைகள் உடுத்தி, உணவூட்டி தங்களுடன் வைத்துக் கொண்டு மீண்டும் அதை புதைத்து விடுகின்றார்கள்.
இது போன்ற பழக்கங்கள் அந்த டோராஜன் இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐதீகமாக இருந்து வருகின்றது.