பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மும்பை சென்றார்.
ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஆட்டத்தில் காயமடைந்தார்.
பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களில் ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மும்பை சென்றார்.
இந்நிலையில், ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே.எல்.ராகுல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.