“யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தமிழரின் இருப்பிற்கான போராட்டமே தவிர பௌத்த மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல“ என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (6.05.2023) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“தையிட்டி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு எதிராக தமிழர் முன்னெடுக்கும் போராட்டமானது அவர்களின் வாழ் உரிமைக்கானது.
போராட்டத்தின் அடுத்தகட்ட பரிணாமம்
மாறாக இந்த போராட்டம் பௌத்த மதம் அல்லது சிங்கள மக்களிற்கு எதிரான போராட்டம் அல்ல.
எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தையும் நேர்மைத்தன்மையையும் சகோதர சிங்கள மக்கள் விளங்கிகொண்டு இந்த பௌத்த பேரினவாத அரசை இத்தகைய கட்டுமானங்களை அகற்றுமாறு அழுத்தம் கொடுப்பார்களாக இருந்தால் அது இந்த போராட்டத்தின் அடுத்தகட்ட பரிணாமமாக அமையும்“ என்றார்.