2023 ஆம் ஆண்டுக்குரிய ஐ.பி.ல் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் நேற்றையதினம்(05.05.2023) குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களமிறங்கிய போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி இலகுவான வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுக்க மொத்தமாக 118 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களை வெறும் 13.5 ஓவர்களில் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி ரஷித்கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதிகூடிய புள்ளிகள்
குஜராத் டைடன்ஸ் அணி வெற்றியடைந்த நிலையில் தொடர்ந்து 14 புள்ளிகளுடன் தொடர்ந்தும் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
இதேவேளை இன்றையதினம்(06.05.2023) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.