பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையின் (NHS) பொது பயிற்சியாளரான (GP) இலங்கையில் பிறந்த மருத்துவர் ஹரீன் டி சில்வா மன்னன் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பொது நடைமுறையில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக மருத்துவர் டி சில்வாவுக்கு பிரித்தானிய எம்பயர் விருதும் வழங்கப்பட்டது.
முடிசூட்டு விழா
இன்று சனிக்கிழமை (06.05.2023) நடைபெறும் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள ‘சாதாரண’ மக்கள் குழுவில் கலாநிதி டி சில்வாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மருத்துவர் குறிப்பிட்டதாவது,
“நான் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோர் என்னை இங்கு அழைத்து வந்தனர், நான் ஏழையாக வளர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது.
“நாங்கள் குடும்பமாக எங்கிருந்து வந்தோம், நான் எங்கிருந்து வந்தேன் என்று யோசித்து முடிவெடுத்து பிரித்தானிய பேரரசின் பதக்கம் பெற்று முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டு வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பது நம்பமுடியாததாகத் தோன்றுகிறது.
பிரித்தானியாவிற்கு குடியேறிய மருத்துவர்
“இது என் பெற்றோர் தொடங்கிய எல்லாவற்றின் உச்சக்கட்டமாகும். அவர்கள் எனக்கு கல்வி கற்பித்தார்கள், என் வயிற்றில் உணவும், முதுகில் ஆடையும் இருப்பதை உறுதி செய்தனர்.
“இந்தச் சாதனைகள் மூலம் அவர்களுக்கு ஏதாவது ஒன்றைத் திரும்பக் கொடுக்க முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன், அது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது.
நான் 2012 இல் ராணியின் வைர விழாவைக் கொண்டாடியதும் , தெருவில் இருந்ததையும், நான் நினைவில் வைத்திருக்கிறேன்.
“இந்நிலையில் இப்படி அங்கீகரிக்கப்படுவது மிகவும் நல்லது. இந்த விழாவை நேரில் பார்ப்பதற்கும், என்னைச் சுற்றியுள்ள சூழலை உணர்வதற்கும், என்னை விட அற்புதமான விடயங்களைச் செய்தவர்களைச் சந்திப்பதற்கும் நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்“ என்றார்.
இந்த நாட்டிற்கு குடியேறியவருக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.