கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வலான பிரதேசத்தில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் களுத்துறை நோக்கி பயணித்த போது, சாரதி உறங்கியமையால் வாகனத்தின வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தலைகீழாக கவிழ்ந்ததால் வீதியின் நடுவில் இருந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அங்கு பயணித்துள்ளனர். விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.