வத்தேகம பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றிய நபர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யட்டவர வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது நெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் “நிலு நிலு” என்ற போலி கணக்கை உருவாக்கி அதில் சிறுமிகளின் படங்களை பதிவிட்டுள்ளார்.
40 வயதுடைய சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபருக்கு இரண்டு திருமணங்கள் நடந்து தற்போது விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.