Loading...
யக்கல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பெலும்மஹர பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியொருவர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
நேற்று காலை வீட்டில் இருந்து சிறுமி காணவில்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகே தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு கமராக்களை பரிசோதித்து சிறுமி கடத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Loading...