தென்னிலங்கையில் விபத்தை ஏற்படுத்திய பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபராதுவ நகரில் ஜீப் வண்டியை செலுத்தி கார் மற்றும் மற்றுமொரு ஜீப் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரித்தானிய பிரஜை மதுபோதையில் காலி நோக்கி சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை
ஹபராதுவ நகரில், பிரித்தானியர் ஜீப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மாத்தறை நோக்கிச் சென்ற கார் மற்றும் ஜீப் மீது மோதியுள்ளது.
வெளிநாட்டு பிரஜை மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை தவிர்க்க தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.