மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட படகினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் நேற்று (11.05.2023) இந்த படகினை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மேலுமொரு படகு தப்பிச்சென்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அமைச்சரின் நடவடிக்கை
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு இன்று (12.05.2023) கடற்றொழில் திணைக்களத்தினால் கையகப்படுத்த உள்ளதாகவும், அதன் பின்னர் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.இந்த நிலையில் டக்லஸ் தேவானந்தாவின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.