கம்பளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) காணாமல் போயிருந்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதி காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12.05.2023) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
யுவதி கொலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) காலை ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, அவ்வழியாக வேலை செல்ல வந்த குறித்த யுவதியிடம் சந்தேகநபர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில், யுவதி அதற்கு மறுப்பு தெரிவித்தமையால் சந்தேக நபர் யுவதியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று யுவதியை அங்கேயே கொலை செய்து, கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.