கொழும்பில் தகாத உறவில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யும் முகவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் ஒரு மணித்தியாலயத்திற்கு 15000 ரூபாய்க்கு இளம் பெண்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட நடமாடும் விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலு்கமைய, இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பிபில பிரதேசத்தை சேர்ந்த 17, 22, 25, 45 வயதுடைய திருமணமாகாத அழகிய பெண்கள் எனவும் முகாமையாளர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான திருமணமாகாதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நவீன வேனில் அழகான பெண்களை வாங்குபவர்கள் சொல்லும் இடங்களுக்கு மேலாளர் விநியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளர், யுவதிகள் ஏற்கனவே தகாத தொழில் ஈடுபடுபவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 2190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.