அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பாதுகாப்பு கருதி ‘சயனைட்’ மல்லிகா என்னும் கைதி வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் பாதுகாப்பு கருதி ‘சயனைட்’ மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றும்படி, சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அடுத்த அறையில் ‘சயனைட்’ மல்லிகா அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர், 6 பெண்களை ‘சயனைட்’ கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் பாதுகாப்பு கருதி ‘சயனைடு’ மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.