Loading...
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடத்தும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே 24ஆம் திகதி சிட்னிக்கு செல்ல உள்ளார்.
இந்த சூழலில் சிட்னியில் உள்ள உள்ளூர் அரசாங்க திணைக்களங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த மாதம் திட்டமிடப்பட்ட காலிஸ்தான் பிரச்சார நிகழ்வை இரத்து செய்துள்ளது.
Loading...
இங்கிலாந்து எண் கொண்ட ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அவுஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
பாதுகாப்பு
இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...