சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்குகின்ற விடுதிகள் மற்றும் உணவகங்களை தீவிரமாக கண்காணிக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள்
கொழும்பு உட்பட அனைத்து மாகாணத்திலும் எந்த வயதுடைய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அறைகள் வங்கப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.விடுதி உரிமையாளர்கள் அதிகமான பணத்தினை சம்பாதிக்கும் நோக்கிலேயே இவ்வாறு வயது குறைந்த சிறுமிகளுக்கும் சட்டவிரோத தம்பதிகளுக்கும் அறைகளை வழங்குவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறை
குறிப்பாக களுத்துறை தெற்கில் உள்ள விடுதி ஒன்றில் உரிய பரிசோதனையின்றி சிறுமிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் மாணவி உயிரிழந்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் சிறிய வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அறைகள் மற்றும் தங்குமிடங்களை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக புதிய நடைமுறைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.