இலங்கையில் தடை செய்யப்பட்ட போதிலும் Onmax DT இன்னமும் தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பிரமிட் பரிவர்த்தனைகளில் சுமார் 10 கோடி அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி நிறுவனம் ஒன்றின் 08 கணக்குகளை முடக்க அண்மையில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவு பிறப்பித்தார்.
பிச்சார நடவடிக்கைகள்
எனினும் அந்த உத்தரவின் பின்னரும் பிச்சார நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், அங்கு முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து பணம் செலுத்தி வருவதாக மேலும் விளம்பரப்படுத்துகிறது.
இந்த மோசடியின் பிரச்சாரத்திற்கு முதலில் பயன்படுத்தப்பட்ட ஊடகமான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை அவர்கள் செய்கிறார்கள்.
அத்துடன் இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் காரணமாக இந்நாட்டின் நீதித்துறை அமைப்பும் மத்திய வங்கியும் சீர்குலைந்துள்ளன.
மத்திய வங்கி
இந்த நிறுவனம் மற்றும் மூன்று நிறுவனங்கள் தொடர்பாக மத்திய வங்கி விசாரணை நடத்தியதுடன், வங்கிச் சட்டத்தின் 83 ஏ பிரிவுக்கு முரணாக செயல்பட்டதால் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஊடகங்கள் ஊடாக பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு மத்திய வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு இந்த நாட்டிலிருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் தடவை என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.