திருகோணமலை- பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய பெண் ஒருவரே (12.05.2023) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகைதராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
நீதி கோரும் குடும்பத்தினர்
இதனையடுத்து குழந்தையும் தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.