மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடைகளை காட்சிப்படுத்தும் வகையிலான புதிய ஃபெஷன் கண்காட்சியொன்றை நடத்த கென்சிங்டன் அரண்மனை தயாராகி வருகிறது.
அதன்படி குறித்த கண்காட்சி நாளை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கண்காட்சியில் முதற்கட்டமாக டயானா அணிந்த மிகவும் பிரபலமான 25 உடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
டயானா பொதுமக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த காலம் முதல் அவர் அணியும் ஆடைகள், அவரது சிகை அலங்காரம் என அனைத்தும் பொதுமக்களினால் கவரப்பட்டது.
புத்தகங்களின் அட்டைப் படத்தில் டயானாவின் புகைப்படம் பொறிக்கப்படின், அவற்றின் விற்பனை 40 வீதம் வரை உயர்ந்தது. அவர் அணியும் உடைகளே மிகவும் பொதுமக்களை கவர்ந்தது.
டயானா குழந்தைகளை கவரும் வகையில் பிரகாசமான வர்ணங்களிலான ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்ததுடன், குழந்தைகள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க ஒருவராக காணப்பட்டார்.
அதுமட்டுமின்றி, அனைத்து மக்களுடனும் அன்பாக நெருக்கமான உறவை பேணி மக்கள் மனதில் மேலும் இடம்பிடித்து பிரபல்யமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.