Loading...
- சூடான சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
- தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) – 2 கப்
ஓமம் – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) – 2
பெருங்காயப்பொடி – 2 சிட்டிகை
எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
Loading...
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.
Loading...