- பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இதன் மூலம் 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகுந்த விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தற்போது 8 அணிகள் வரை கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியால் 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பெங்களூரு அணி தரப்பில் வேய்ன் பர்னெல் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்கள் கொடத்து 2 விக்கெட்டுகளையும், கரன் ஷர்மா 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இந்நிலையில் நான் பந்து வீசியிருந்தால் ராஜஸ்தான் அணியை 40 ரன்னில் ஆல் அவுட் செய்திருக்கலாம் என விராட் கோலி கிண்டலாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.