Loading...
ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று அ.தி.முக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாள் நாளை (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா, கடிதம் மூலம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘அ.தி.மு.க கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டும். அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்த நினைத்தவர்களிடம் இருந்து காத்து ஜெயலலிதாவின் நம்மை ஆன்மா வழிநடத்தியுள்ளது.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...