சந்தையில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம் காரணமாக மலையகப் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரிக்கும் விலைகள்
இந்தநிலையில், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோ கிராம் 510 ரூபாவிற்கம், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கரட் 160 முதல் 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கேரட்டின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாரஹேன்பிட்டி, தம்புத்தேகம, தம்புள்ளை மற்றும் நுவரெலியா ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களின் விலைகளுடன் மரக்கறிகளின் சில்லறை விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இடைத்தரகர்கள் மரக்கறிகளின் விலையை அதிகரிப்பதாக வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.