மலையாள இயக்குனரான சித்திக், தான் மலையாளத்தில் இயக்கிய வெற்றிப்படங்களை தமிழிலும் ரீமேக் செய்து இங்கேயும் வெற்றி கண்டவர். அந்த வரிசையில் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தையும் தமிழில் ரீமேக் செய்து இயக்கவிருக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், மலையாளத்தில் பேபி அனிகா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவின் மகள் நைனிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரவிந்த் சாமி தற்போது ‘சதுரங்க வேட்டை’, ‘நரகாசுரன்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படங்களை முடித்த பிறகு சித்திக் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திக் தமிழில், ‘ப்ரெண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கவர்.