நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் உள்ள நான்கு மாடி விடுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தீ விபத்தை அடுத்து மேலும் 11 பேரைக் காணவில்லை என்பதால் எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் எரியும் கட்டிடத்தின் கூரையில் இருந்து குறைந்தது ஐந்து பேரை அதிகாரிகள் மீட்டதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை தீயில் இருந்து தப்பிக்க கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த ஒரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடமபெற்று வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.