மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து 2 மாதங்களை கடந்துள்ள நிலையில், பிப்ரவரி 24ம் தேதி அவருடைய பிறந்தநாள் வருவதால் அதிமுக தலைமையகத்தில் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டு 9 அடி சிலையும் கட்சியின் அலுவலகத்தில் உள்ளது. அதனை எம்ஜிஆரின் சிலைக்கு அருகிலேயே வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
மேலும், ஜெயலலிதா குற்றவாளி என ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அவருக்கு நினைவிடம் அமைப்பதில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அவரின் பிறந்தநாளில் அதிமுகவின் தலைமையகத்திலாவது சிலை வைப்போம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் குறுகிய கால இடைவெளி மட்டுமே இருப்பதால் அந்த திட்டம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். மேலும் சசிகலாவும் சிறையில் இருப்பதால் அவரிமும் ஆலோசனை நடத்திய பிறகே சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. சிலை திறப்பு விழாவிற்கு சசிகலாவை பரோலில் அழைத்து வந்து அவர் கையாலே சிலையை திறக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.