Loading...
வடக்கு கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்படி வடமாகாண ஆளுநராக பிஎம்எஸ் சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
மூன்று ஆளுநர்களும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அந்தந்த பதவிகளில் இருந்து ஜனாதிபதியினால் கடந்த திங்கட்கிழமை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...