தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தமது கட்சி பிரிந்து செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன் தனிக்கட்சி ஒன்றுக்கு வழங்கப்படக்கூடிய அத்தனை வரப்பிரசாதங்களும் தமது கட்சிக்கும் பாராளுமன்றத்தில் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கோரிக்கை தொடர்பாக இன்றைய தினம் பதிலளிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.