ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அப்போலோவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த பதில் மனுவில், தற்போது அதிர்ச்சி தரும் பதிலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னுடைய சிகிச்சை படத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனால்தான் நாங்கள் அவரின் புகைப்படத்தை வெளியிடவில்லை என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இத்தனைநாள் ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் பல்வேறு கட்சித்தலைவர்கள் எழுப்பியிருந்த நிலையில் பதிலே கூறாமல் இருந்த அப்போலோ நிர்வாகம், இப்போது மட்டும் இந்த பதிலை தெரிவிப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது என பரவலாக பேசப்படுகிறது.