- சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது.
- அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
சென்னையில் சேப்பாக்கத்தில் வரும் மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியும், மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் மே 26 அன்று 2-வது தகுதிச் சுற்று போட்டியும், மே 28 அன்று இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. நண்பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.