Loading...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
Loading...
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தம் உள்ளிட்ட விரிவுரையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகங்களில் தற்போது காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...