Loading...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாயாகவும், விற்பனை விலை 312.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Loading...
இதற்கிடையில் நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42 ரூபாயாகவும், விற்பனை விலை 316.18 ரூபாவாகவும் பதிவாகியிருந்து.
நீண்ட தரவுகளின்படி இறுதியாக 2022 ஏப்ரல் 6 ஆம் திகதி 300 ரூபாயை விட குறைவாக டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
Loading...